சிரித்த முகம் - அதில்
சிங்காரமாய் புன்னகை
சிக்கலோடு பேசுவோருக்கு- நொடியில்
சில்லென்று சாட்டையடி
சிலகணம்தொடரும் - நீல
சிவனின் சினம்
சிந்தனையில்என்றும் - அழியாத
சிகரத்தின் பொன்முடி
சிறப்பான இலக்கியங்கள் - கேட்போரின்
சிந்தையில் நிலைக்கும்
சீரான இலக்கணமோ - சொற்களில்
சிரித்து நிற்கும்
சிவப்பான தேகம் - அதனுள்ளே
சிந்தனை களஞ்சியம்
மதிவாணர் மாண்பு