Thursday, 17 October 2013

                 இனியவள் 
கண்கள் இரண்டும் மீனா - அவள்
என்றும் பிரகாசிக்கும் விண்மீனா 
சொற்கள் தித்திக்கும் செந்தேனா 
பற்கள் இரண்டும்   பச்சரிசிதானா
                                      ம . கண்ணன் M.A., B.Ed., Ph.d.,

Friday, 6 September 2013

                         
 
                     ஏழை 
கனவுகள்  நிலைக்காத பொழுதும்
கண்களில் நிறையும் இலட்சியம்
உடலின் மெலிவும் வருத்தாது
உன்னதமான நினைவே உறுதி
உழைப்பின் பயன் என்றாவது
உனக்கு பரிசாவது நிச்சயம் 

Friday, 24 February 2012

            சமுதாயம் 
சிந்திக்கும் ஒருபொழுது 
சிதைந்து விடுகிறது 
சீர்கெட்ட சமுதாயத்தை
சிலநிமிடங்களிலே காணயிலே!
மனமானது அமைதியாக
இருந்தாலும் காணும் 
இன்னல்களை யாவும் 
குத்துகின்றன  மனதை !
உதயமாகும் எண்ணங்கள் 
உன்னதமானதாக அமைந்தால் 
சமுதாயத்தின் தீயவிழிகளை 
சிதைத்து சீர்படுத்தலாம் !
தன்னலம் மட்டுமே 
தன்னுரிமை மனிதனுக்கு 
தவறுகளை நீக்குவதற்கு 
தவறி விடுகின்றான் !
 
          உணர்த்தியவள் 
எனக்குள் இருந்த
என்னையே காட்டி
தோல்விகளை எல்லாம்
தொலைக்க செய்தல்
உலகம் இதுதான்
உள்ளம் அமைதிபெற
உண்மையை எனக்கு 
உணர்த்தி வந்தாள் !
காரணங்கள் தெரியாமல்
அலைந்தேன் திரிந்தேன் !
அடையாளம் காட்டி
அவையத்தை உணர்த்தினாள்! 
கண்ணீரோடு இருந்த
காலத்தை மாற்றி
இன்பமான நாட்களில்
இளைப்பாற வைத்தாள்! 
ஓராயிரம் கவிதைகள்
படைத்தேன்அதன்
ஆதாரமாக இருந்து
ஆனந்தம் கொண்டாள்!
                                 -மருத. கண்ணன்  

       மலரும் 
சருகின் ஓசையா
    எனது மொழி
மெருகேறும் மனம்
   என்றும் இனி
கருவென மாறும்
   உனது அன்பு 
உருவாக தோன்றும்
   உனது  நினைவு
               மருத. கண்ணன்
      

Friday, 17 February 2012

innalakal

இன்னல்கள் 
பனிக்கட்டியாக
  கரையவேண்டியவை
கடலாக
  பெருகுகிறதே!
பனித்துளியாக
  மறையவேண்டியவை
பாரங்கற்காக
  குவிகிறதே !
மலரிதழாக      
  மென்மையாகவேன்டியவை 
மரப்பட்டையாக
கடினமகிறதே !

valvu

பட்டாம்பூச்சியின் 
பயணம் -வாழ்வு