Sunday, 18 October 2015

தேய்வது நீ மட்டுமல்ல
      எனது வாழ்க்கையும் தான்
ஓயாத உழைப்பு இருந்தும்
      ஒடிந்து கொண்டது வாழ்வு
ஊதியம் கடுகளவுதான் எனினும்
       ஊண்ணுணவு கானல் நீரே
பாலையான மனதுடன் நான்
        பாரினில் தவழ்கிறேன் இன்னும்

செருப்புத் தைக்கும் தொழிலாளி 

Monday, 28 September 2015

தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம்  நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015

                             வகை 4 புதுக் கவிதைப் போட்டி

                                  ஏழையின் மனம்

கண்ணீர் வெள்ளத்தில் 
   கரைந்த மனம்
       கருகிக்கொண்டே இருந்தது!

வாசல்கதவைத் திறந்து
   வசந்தகாலத்தை எதிர்நோக்கி
       வருத்தத்தோடு காத்திருந்தேன்!

இருண்ட மனதின்
   இந்நிலை என்றுதான்
      இல்லாமல் இருக்குமோ!

பணம் எந்நாளும்
    பகைத்துக் கொண்டு எங்கேயோ
       படுத்துக் கொண்டது!

கால்கள் நடந்து
   காயங்களே மிச்சம்
     காணவில்லை  வசந்தம்!

குடிசையில் தூங்கி
   குமுறி அழுகின்றது
      குரங்கு மனம்

அகப்பையில் சிறிதும்
    அகப்படவில்லை உணவு
        அவசரபடவில்லை கைகள்!

படுக்கையில் இருந்து
    பல்லக்கில் இருப்பதாக
        பகல்கனவு காண்கிறேன்!

பாழாய்போன வாழ்வில்
    பாம்பாய் சுற்றுகிறது
       பாவங்களின் பரிசு

நெஞ்சத்தில் தீ
    நெருங்கியது மரணம்
        நெட்டுயிராய் நான்

இன்பம் என்றுமே
    இயலாத ஒன்றென
        இருந்துவிடுகிறேன் இனி


இப்படைப்பு எனது சொந்த படைப்பே என உறுதி கூறுகிறேன்

தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம்  நடத்தும் மின் தமிழ் இலக்கியப்போட்டி-2015-க்காகவே எழுதப்பட்டது.

இதற்கு முன் வெளியான படைப்பு அல்லமுடிவு வெளி வரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது எனவும் உறுதி அளிக்கிறேன் -                                     
                                         ம. கண்ணன், திருச்செங்கோடு






Friday, 11 September 2015

            தாக்கம்
என்னைக் கண்டு
வெட்கப்பட்ட
ஒரு நொடி போதுமே !
இந்த
ஆயுளின்
கடைசி நிமிடம் வரையில்
அதன் உள்ளார்ந்த
ஆனந்தத்தில் இருக்க !
திரும்பிய  பொழுதில்
திசைகளை மறந்தேன்
உறங்காத விழிகளும்
உண்மையாக உறங்கின !
உள்ளுணர்வில் என்றும்
உறங்கி கொண்டிருப்பாய்
               நினைவு 

நீரின் மேலிட்ட கோலமா?
     என் நினைவு
             உன் மனதில்
கல்லில் எழுதிய எழுத்து
     உன் நினைவு
             என் மனதில் !
செடியில் பூக்கும் மலரா?
     என் நினைவு
             உன் மனதில்
மின்னனால் ஏற்படும் விளைவு
     உன் நினைவு
            என் மனதில் !
நெஞ்சத்தில் உறுதியை விதைத்து
       நேர்மையுடன் பிழைத்த வந்தேன்
பஞ்சமான வாழ்வு இருந்தபோதிலும்
       பழித்து பேசாவண்ணம்  வந்தேன்
மஞ்சள் நிறம் வனத்திலே
       மதியாய் வாழ நினைத்தேன்
தஞ்சமென சென்ற இடத்திலோ
       தடுமாற செய்தது சூழல்

                        திரிபு 

Monday, 4 May 2015


  

              பாவேந்தர் பாரதிதாசன்

அமுதமென்று அழைத்திட்ட நிலையில்
   அருங்சுவை தோன்றிட கண்டு
அமுதமொழியால் ஆற்றல் கொண்டு
   அருமைப் படைப்புகளைக் கொடுத்தாய்

எங்கள் வாழ்வும் வளமும்
   என்றும் குன்றாத நிலைக்காகச்
சங்கொலி கொண்டு முழங்கி
   சான்றோரிடையே நிலைத்திட செய்தாய்

செந்தமிழை என்றும் மாறாத
   செழுமை சுவை நறுந்தேனாய்
பைந்தமிழாய் பாரினில் நிலைத்திட
   பல்சுவைப் படைப்புகளை அளித்தாய்

உயிருக்கு நிகராகத் தமிழை
   உள்ளத்தில் விதைத்து சென்று
உயிரே தமிழென ஓங்கி
   உரைத்திட கவிகளைப் படைத்தாய்

தமிழச்சியின் கத்தியாய் தோன்றி
   தனல்வீரத்தை தமிழருக்கு அளித்து
தமிழின் செழுமை திறத்தை
   தரணியில் சிறப்புற அமைத்தாய்

குடும்ப விளக்காக ஒளிர்ந்து
   குன்றாத புகழை கொடுத்து
தடுமாறும் நெஞ்சத்திற்கு வழிகாட்டும்
   தமிழைக் கொடுத்துச் சென்றாய்
                                                                             --- ம. கண்ணன்
நினைவுகள் மறையும்பொழுது
நிதியிலே நிறைந்து
நீ இருக்க வேண்டும்

மரணத்தை தழுவும் நிலையிலும்
மண்ணில்  புதைந்து
விதையாக வேண்டும்

மனிதன் மரணித்த போதும்
மாமணியாக வேண்டும் மண்ணிலே

என்றும் திகழும் உனது
திண்ணியவாழ்வு

உறவுகள் உன்னை
உதறி தள்ளும்போதும்
உயர்த்து அவர்களுக்கும்
உதவி செய்ய
மறவாதே

மக்கும் தேகத்தில்
மலையளவு ஆசைகள்
மரணத்தில் அவனை
மண்டியிட செய்யவல்லன

 வேண்டுகோள்