உள்ளத்தின் பார்வை
எங்கேயோ தேடுகிறாய்
என்னுள்ளே உன்னைக்
காண மறுக்கிறாய்!
மனமானது மயங்குறது
மங்கையின் பார்வையில் !
தேனின் நோக்கினை
தெளிவாய் காட்டுகிறாய்!
தெள்ளுத் தமிழின்
திகட்டும் மொழியினை!
உள்ளத்தின் இனிமையை
உதட்டளவில் தெரிகிறது
உறங்கா விழிகள்
உண்மை உரைக்கின்றன
உன்னுள் நானிருப்பதை
உண்மையை மட்டும்
உரைக்க மறைப்பதேன் -மருத.கண்ணன்
No comments:
Post a Comment