மனம்
உனது பெயரை
உச்சரித்த பிறகுதான்
இசையின் இனிமையை
இன்பமாக ரசித்தேன்
சொற்களின் பொருளை
சோதனையைக் கொண்டு
ஆராய்ந்து அதனால்
ஆனந்தம் கொள்கிறேன்
பார்க்கும் இடமெங்கும்
பால்போன்ற உன்முகமே
மனதில் தோன்றி
மறையாமல் நிற்கிறது
கடைகளின் பெயர்பலகையில்
கண்கள் தேடுகின்றன
இனிமையான உனது
இசையின் பெயரையே
அடிக்கடி தோன்றி
அச்சுறுத்தி செல்கிறது
நினைவுகளில் உனது
நெஞ்சார்ந்த அன்பு
மற்றவற்றை நினைக்கவும்
மறந்து செல்கிறது
மங்கையின் மேல்கொண்ட
மறவாத நெஞ்சம்
No comments:
Post a Comment