Wednesday, 15 October 2014

புன்னைகை தேவை
உன்
விழிப்பார்வையில்
விழுந்த நொடியில்
ஒடிந்து சிதைந்தது
என் மனம்
பசுஞ்சோலையாக
மாறவேண்டிய உள்ளம்
பாலைவனமாக
மாறியது ஏனோ
உண்மையான புன்னகை
இல்லையாயினும்
போலியான புன்னகை
செய்தால் என்ன
அனலாய்
மாறிய நெஞ்சத்தில்
சிறுதுளி பனியாவது
விழட்டுமே
உனக்காக
பலபொழுதுகளை
இழந்துவிட்டேன்
ஒரு நாழிகையேனும்
எனக்காக
 அர்ப்பணித்தால் என்ன

No comments:

Post a Comment