Wednesday, 18 January 2012
manam
மனம்
உனது பெயரை
உச்சரித்த பிறகுதான்
இசையின் இனிமையை
இன்பமாக ரசித்தேன்
சொற்களின் பொருளை
சோதனையைக் கொண்டு
ஆராய்ந்து அதனால்
ஆனந்தம் கொள்கிறேன்
பார்க்கும் இடமெங்கும்
பால்போன்ற உன்முகமே
மனதில் தோன்றி
மறையாமல் நிற்கிறது
கடைகளின் பெயர்பலகையில்
கண்கள் தேடுகின்றன
இனிமையான உனது
இசையின் பெயரையே
அடிக்கடி தோன்றி
அச்சுறுத்தி செல்கிறது
நினைவுகளில் உனது
நெஞ்சார்ந்த அன்பு
மற்றவற்றை நினைக்கவும்
மறந்து செல்கிறது
மங்கையின் மேல்கொண்ட
மறவாத நெஞ்சம்
Subscribe to:
Posts (Atom)
-
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்...






