Wednesday, 18 January 2012

manam

              மனம் 
உனது பெயரை 
   உச்சரித்த பிறகுதான் 
இசையின் இனிமையை 
     இன்பமாக ரசித்தேன் 
சொற்களின் பொருளை 
     சோதனையைக் கொண்டு 
ஆராய்ந்து அதனால் 
      ஆனந்தம் கொள்கிறேன் 
பார்க்கும் இடமெங்கும் 
       பால்போன்ற  உன்முகமே 
மனதில் தோன்றி 
      மறையாமல் நிற்கிறது 
கடைகளின் பெயர்பலகையில் 
     கண்கள் தேடுகின்றன 
இனிமையான உனது 
     இசையின் பெயரையே 
அடிக்கடி தோன்றி 
    அச்சுறுத்தி செல்கிறது
நினைவுகளில் உனது
    நெஞ்சார்ந்த அன்பு 
மற்றவற்றை நினைக்கவும் 
    மறந்து செல்கிறது 
மங்கையின் மேல்கொண்ட 
    மறவாத நெஞ்சம்
              தோன்ற வேண்டும் 
உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் 
     உயர்ந்ததாக இருக்க வேண்டும் 
வெள்ளத்தின் போக்கினை நீக்கி 
      வேகத்தை கொண்டிடல் வேண்டும்
கள்ளமான மனதின் செயலை 
     கண்டு நீக்கிடல் வேண்டும் 
பள்ளமான நிலத்தையும் என்றும் 
     பயனடைய செய்தல் வேண்டும் 
குள்ளமான நோக்கத்தினை பிறர்க்கு 
      குற்றமற நெக்குதல் வேண்டும்

Wednesday, 14 December 2011

kadal

கடல்பெண்ணே
ஏன் இந்த கோபம் 
கரையின் மீது 
அலையாய் வந்து 
தாக்குகிறாய் !
உன்னுடைய 
காதலனை காணவில்லை 
என்பதனால் !
கண்ணீரை பெருக்கி 
சோகம் கொண்டு 
பொங்கி எழுகிறாய் !
அமைதி என்றும் 
உனக்கில்லையா
மக்களின் மீது 
காட்டிவிடாதே
உனது கோபத்தை 
கருணைக் கொள் 
அவர்களின்மீது !
உன்னை கறைபடுத்தும் 
அவர்களை மன்னித்துவிடு !

varumai

வறுமை 
கண்களில் நீரில்லை
கடுகளவும் உணவில்லை 
உடம்பில் வலுவுமில்லை
உணர்வுகளுக்கு இடமில்லை
காதல் கதையில் மட்டுமே
சாதலை நோக்கி பயணம்
சாதனை எண்ணமிருந்தாலும்
சாத்தியமாக இடமில்லை
உறவுகள் வெறுக்கின்றன
உள்ளதை மறைக்கின்றன
காணும் இடமெல்லாம்
காட்சிகள் மறைகின்றன
ஏன் இந்த
நிலையென எனும்பொழுதே
மரணத்தின் பிடியில்
மங்கின ஒளியாக நான் !

ennaval

இனியவளே 
தென்றலின் குளுமை 
அவளது வார்த்தைகள் 
கருணையின் மழை 
அவளது உள்ளம் 
அன்பின் அவதாரம் 
அவளது பிறப்பு 
இன்பத்தின் அருவி 
அவளது செய்கை 
நிலவின் ஒளியாகும் 
அவளது முகம் 
சந்தனக்குளம்பின் மணம்
அவளது தேகம் 
கொடுத்து சிவந்தன 
அவளது கைகள் 
அன்றில் பறவையவோம்
நானும் அவளும் 
முயற்சி 
முயற்சி என்பதனை 
முன்னெடுத்து பார் !
முடிவுகளை மாற்றும்
முகம் உன்னுடையது !
முதல் என்றும் 
முடிவாக மாறுவதில்லை!
முத்திரை பதிக்கும்
முகவுரை உன்னுடையது  !

Tuesday, 13 December 2011


வாடியநிலை 
இதயத்திற்கு  மலரை
அளிக்கவில்லை !
முள்ளையாவது
விதைக்காமல்
இருந்திருக்கலாமே !
காணும் இடம்
யாவையும்
கானல் நிலையே !
நடக்கும்
ஒவ்வொரு அடியும்
அனலின் கூடாரம் !
தேடுபவை
எல்லாம்
தோல்வியின் வண்ணம் !
வசந்தத்தின் பார்வையும்
என்மீது
படும்பொழுது
வெப்பத்தையே
உமிழ்கின்றன !