Monday 4 May 2015


  

              பாவேந்தர் பாரதிதாசன்

அமுதமென்று அழைத்திட்ட நிலையில்
   அருங்சுவை தோன்றிட கண்டு
அமுதமொழியால் ஆற்றல் கொண்டு
   அருமைப் படைப்புகளைக் கொடுத்தாய்

எங்கள் வாழ்வும் வளமும்
   என்றும் குன்றாத நிலைக்காகச்
சங்கொலி கொண்டு முழங்கி
   சான்றோரிடையே நிலைத்திட செய்தாய்

செந்தமிழை என்றும் மாறாத
   செழுமை சுவை நறுந்தேனாய்
பைந்தமிழாய் பாரினில் நிலைத்திட
   பல்சுவைப் படைப்புகளை அளித்தாய்

உயிருக்கு நிகராகத் தமிழை
   உள்ளத்தில் விதைத்து சென்று
உயிரே தமிழென ஓங்கி
   உரைத்திட கவிகளைப் படைத்தாய்

தமிழச்சியின் கத்தியாய் தோன்றி
   தனல்வீரத்தை தமிழருக்கு அளித்து
தமிழின் செழுமை திறத்தை
   தரணியில் சிறப்புற அமைத்தாய்

குடும்ப விளக்காக ஒளிர்ந்து
   குன்றாத புகழை கொடுத்து
தடுமாறும் நெஞ்சத்திற்கு வழிகாட்டும்
   தமிழைக் கொடுத்துச் சென்றாய்
                                                                             --- ம. கண்ணன்
நினைவுகள் மறையும்பொழுது
நிதியிலே நிறைந்து
நீ இருக்க வேண்டும்

மரணத்தை தழுவும் நிலையிலும்
மண்ணில்  புதைந்து
விதையாக வேண்டும்

மனிதன் மரணித்த போதும்
மாமணியாக வேண்டும் மண்ணிலே

என்றும் திகழும் உனது
திண்ணியவாழ்வு

உறவுகள் உன்னை
உதறி தள்ளும்போதும்
உயர்த்து அவர்களுக்கும்
உதவி செய்ய
மறவாதே

மக்கும் தேகத்தில்
மலையளவு ஆசைகள்
மரணத்தில் அவனை
மண்டியிட செய்யவல்லன

 வேண்டுகோள்
புதிய உலகை நோக்கி
கண் விழித்து பார்க்கின்ற தளிரே
உன்னிடம்
வேகம்  உண்டு
முயற்சி உண்டு
இளமை உண்டு
காலம் உண்டு
போராட்டக்  குணம் உண்டு
உன்னைப் போன்றே
மனிதரில்
குழந்தைக்கும் உண்டு
காலம்  செல்லசெல்ல
இக்குணங்கள்
நீங்கி விடுகின்றன
மனிதனைவிட 
வெற்றி காணும் நீ
முயற்சியின்
முன்னோடியாக
திகழ்கிறாய் 
உன்னைக் கண்டேனும்
திருந்திகொள்ளட்டும்
திருத்திக்கொள்ளட்டும்

தளிரின் முகம்