Monday 4 May 2015


  

              பாவேந்தர் பாரதிதாசன்

அமுதமென்று அழைத்திட்ட நிலையில்
   அருங்சுவை தோன்றிட கண்டு
அமுதமொழியால் ஆற்றல் கொண்டு
   அருமைப் படைப்புகளைக் கொடுத்தாய்

எங்கள் வாழ்வும் வளமும்
   என்றும் குன்றாத நிலைக்காகச்
சங்கொலி கொண்டு முழங்கி
   சான்றோரிடையே நிலைத்திட செய்தாய்

செந்தமிழை என்றும் மாறாத
   செழுமை சுவை நறுந்தேனாய்
பைந்தமிழாய் பாரினில் நிலைத்திட
   பல்சுவைப் படைப்புகளை அளித்தாய்

உயிருக்கு நிகராகத் தமிழை
   உள்ளத்தில் விதைத்து சென்று
உயிரே தமிழென ஓங்கி
   உரைத்திட கவிகளைப் படைத்தாய்

தமிழச்சியின் கத்தியாய் தோன்றி
   தனல்வீரத்தை தமிழருக்கு அளித்து
தமிழின் செழுமை திறத்தை
   தரணியில் சிறப்புற அமைத்தாய்

குடும்ப விளக்காக ஒளிர்ந்து
   குன்றாத புகழை கொடுத்து
தடுமாறும் நெஞ்சத்திற்கு வழிகாட்டும்
   தமிழைக் கொடுத்துச் சென்றாய்
                                                                             --- ம. கண்ணன்

No comments:

Post a Comment