Wednesday 14 December 2011

kadal

கடல்பெண்ணே
ஏன் இந்த கோபம் 
கரையின் மீது 
அலையாய் வந்து 
தாக்குகிறாய் !
உன்னுடைய 
காதலனை காணவில்லை 
என்பதனால் !
கண்ணீரை பெருக்கி 
சோகம் கொண்டு 
பொங்கி எழுகிறாய் !
அமைதி என்றும் 
உனக்கில்லையா
மக்களின் மீது 
காட்டிவிடாதே
உனது கோபத்தை 
கருணைக் கொள் 
அவர்களின்மீது !
உன்னை கறைபடுத்தும் 
அவர்களை மன்னித்துவிடு !

varumai

வறுமை 
கண்களில் நீரில்லை
கடுகளவும் உணவில்லை 
உடம்பில் வலுவுமில்லை
உணர்வுகளுக்கு இடமில்லை
காதல் கதையில் மட்டுமே
சாதலை நோக்கி பயணம்
சாதனை எண்ணமிருந்தாலும்
சாத்தியமாக இடமில்லை
உறவுகள் வெறுக்கின்றன
உள்ளதை மறைக்கின்றன
காணும் இடமெல்லாம்
காட்சிகள் மறைகின்றன
ஏன் இந்த
நிலையென எனும்பொழுதே
மரணத்தின் பிடியில்
மங்கின ஒளியாக நான் !

ennaval

இனியவளே 
தென்றலின் குளுமை 
அவளது வார்த்தைகள் 
கருணையின் மழை 
அவளது உள்ளம் 
அன்பின் அவதாரம் 
அவளது பிறப்பு 
இன்பத்தின் அருவி 
அவளது செய்கை 
நிலவின் ஒளியாகும் 
அவளது முகம் 
சந்தனக்குளம்பின் மணம்
அவளது தேகம் 
கொடுத்து சிவந்தன 
அவளது கைகள் 
அன்றில் பறவையவோம்
நானும் அவளும் 
முயற்சி 
முயற்சி என்பதனை 
முன்னெடுத்து பார் !
முடிவுகளை மாற்றும்
முகம் உன்னுடையது !
முதல் என்றும் 
முடிவாக மாறுவதில்லை!
முத்திரை பதிக்கும்
முகவுரை உன்னுடையது  !

Tuesday 13 December 2011


வாடியநிலை 
இதயத்திற்கு  மலரை
அளிக்கவில்லை !
முள்ளையாவது
விதைக்காமல்
இருந்திருக்கலாமே !
காணும் இடம்
யாவையும்
கானல் நிலையே !
நடக்கும்
ஒவ்வொரு அடியும்
அனலின் கூடாரம் !
தேடுபவை
எல்லாம்
தோல்வியின் வண்ணம் !
வசந்தத்தின் பார்வையும்
என்மீது
படும்பொழுது
வெப்பத்தையே
உமிழ்கின்றன !

vetri

வெற்றி 
முள் இல்லாமல் 
ரோஜாவை 
பறிக்கமுடியாது!
வலி இல்லாமல் 
வாழ்க்கையில் 
வெற்றி பெற முடியாது !
உண்மை இல்லாமல் 
எதுவும் 
நிலைபெற முடியாது !
உழைப்பு இல்லாமல் 
உயர்வை 
அடைய முடியாது !

valvu

              
தண்ணீரில் பிறந்தேன் 
கண்ணீரோடு வாழ்கிறேன் 
காலங்கள் நகர்ந்தாலும் 
காட்சிகள் மாறவில்லை
               நிலை
           


Wednesday 9 November 2011

nanakiyal aval

         நானாகிய அவள்
 செல்லரித்த குடையானது
என்மனம்
அவளது நினைவுகளால்
 நீங்க புன்னகையால் 
நெகிழ்கிறது 
கல்லான மனது 
காவியம் படைக்கும் 
காதலானது 
எங்களுடையது
 

natpu

                  நண்பர்கள் 
காலங்கள் கடந்து செல்லும் 
காயங்கள் மட்டும் நிலைக்கும் 
இனிமையான நினைவுகளால் என்றும் 
இனிக்கும் அந்த காயங்கள் 
பார்க்காத நாட்களில் எப்போது 
பார்ப்பேன் என்ற மனநிலை
பார்த்த பொழுது இன்பமாக
பேசிக் கொண்டோம் அந்நாட்களில்  
மறக்காத நினைவுகளோடு இன்று 
மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் 
அன்பான உன் வார்த்தைகள் 
இன்பமாய் ஒலிக்கின்றன என்னிடம் 
                        

Sunday 6 November 2011

ullatthin parvai

உள்ளத்தின் பார்வை 
எங்கேயோ தேடுகிறாய் 
என்னுள்ளே உன்னைக் 
காண  மறுக்கிறாய்!
மனமானது மயங்குறது 
மங்கையின் பார்வையில் !
தேனின் நோக்கினை
தெளிவாய் காட்டுகிறாய்!
தெள்ளுத் தமிழின் 
திகட்டும் மொழியினை!
உள்ளத்தின் இனிமையை 
உதட்டளவில் தெரிகிறது
உறங்கா விழிகள் 
உண்மை உரைக்கின்றன  
உன்னுள் நானிருப்பதை 
உண்மையை மட்டும் 
உரைக்க மறைப்பதேன்
                              -மருத.கண்ணன்

Monday 22 August 2011

aaval

                        ஆவல் 
பனித்துளியை சுமக்கும் இலையும் 
இனிமை காணும் சிலகணம் !
மலரும் மொட்டும் கொள்ளும்
சிலகணம் தென்றலின் இனிமையை !
 பேசாவிழிகளும் இன்பம் காணும் 
பூவிழியாளை கண்ட பொழுது !
இசையை உணரும் மனமும் 
இனிமை கொள்ளும் இசைக்க !
_என்றும் இனியவன் 

Wednesday 6 July 2011

iravu

                   இரவு 
உள்ளம் கசந்த ஏழைக்கு 
கள்ளம் இல்லாத அமைதி 
எங்கும் காணாத அமைதி 
ஏழையின் மனதில் மட்டும் 
மங்கிய வாழ்வின் எதிர்காலத்தை 
மனவானில் காணும் முயற்சி 
இளமை பருவத்தின் இன்னலை
இனிதே கழிக்கும் தோற்றம்










Friday 29 April 2011

punnagai

உணர்வுகள் கசக்கும் நிலையிலும் 
உண்மையினை ஏற்றுக் கொள் 
வாழும் நாள்களில் இன்னல்கள் 
வந்துகொண்டே இருக்கும் நிலையில் 
உள்ளத்தினை மென்மையாக வைத்துப்பார் 
கள்ளக் குணங்கள் காணாது
தேடும் இதயத்தில் இருக்காது 
தெளிவான எண்ணங்கள் என்பதை 
தெள்ளத் தெளிவாக புரிந்துகொண்டால் 
உள்ளத்தில் காணலாகும் புன்னகை
 நிலையில்லா மனிதரை என்றும்
நினைத்து கொண்டு இராதே
நிம்மதியான வாழ்க்கையினை வாழ
நிறைவான இதயத்துடன் இரு

Friday 15 April 2011

valum nilai

           வாழும்நிலை 
பூமிதனில் என்னடா பிறந்தோம் 
வாழும் நாட்களில் நல்லவனாய் 
உள்ள மனிதர்களுக்கு நன்மையை 
உள்ளவரையில் செய்யவேண்டும் 
மற்றவர்களுக்காக வாழ்வதே சிறந்தது 
வாழும் பொழுதுகளை நேசிப்போம் 
உண்மையான நிலையைவிட்டு விலகாமல் 
உன்னதமான உறவுகளை நேசிக்கவேண்டும் 
காணும் யாவையும் உண்மையானவையல்ல 
பகட்டுத்தனம் நிறைத்து காணப்படுகிறது 

manam

                                                               துடிக்கும் மனது 
சிவனின் நெற்றிக்கண் தான் -என் 
மனதின் நிலையாக காண்கிறேன் 
வெளியிலிருந்து பார்ப்பவர்க்கு அமைதியாக-என் 
உள்ளே கண்டால் கனலின்போக்கு 
கொடுமைகளின் ஊற்றகத்தான் மனம் 
கடுமையாக போராடிக்கொண்டு இருக்கிறது 
கனலின் தாக்கத்தை கண்டவனுக்கு 
புனலின் குளிர்மையை காண்பதேது
வாட்டங்களின்  குவியலாய் உள்ளது -அதனை
போக்கத்தான் பூமிதனில் உள்ளாரோ 
காணும் வழியெங்கும் முட்பாதையே 
காலம் உணர்த்தும் வசந்தத்தை 
                                       மருத.கண்ணன்  

thunbam

               துன்பநிலை 
பேசாத மனதின் வலியைத்தான்
பேசும் மனங்கள் ரசிக்கின்றன
தேடும் வழியினை காணவில்லை 
தேற்றிகொடுக்காக யாரும் இல்லை 
வாடும் மனங்களை  வதைப்பதே 
வாடிக்கையாக மாறி விட்டன  
வன்மம் மனதில் கொண்டே 
தன்னுடைய காரியத்தை செய்வோர்  
காணும் வழியெங்கும் முட்களின் 
காட்சியாக மாறும் நிச்சயம் 
பூக்களை பறிக்க நினைத்தால்
பூகம்பம் தான் தோன்றுகிறது
தோல்விகளும் வரலாம் ஒருசிலவாக
வாழ்க்கையே தோல்வியென்றால் எப்படி 

Wednesday 6 April 2011

kavithai kani

              உணர்ந்து கொள் 
தோல்வியை கண்டு துவளாதே 
துடிப்புடன் செயல்பட்டால் தான் 
தூறும் மழையும் கைக்குள்ளே 
துடிக்கும் மின்னலும் உள்ளங்கையிலே 
கண்ணீர் மட்டுமே உனக்கில்லை 
கடவுளும் இருப்பன் உன்னுள்ளே 
உணர்வுகளை உண்மையென  நம்பு
உலகமும் உனக்காக ஏங்கும் 
நம்பிக்கை என்னும் விதையை   
நெஞ்சத்தில் நிதமும் நிறைத்தால் 
வாழ்வில் தோன்றும் இன்னலை 
வழி தெரியாமல் சென்றுவிடும் 


Friday 1 April 2011


kavithai

                    மனம் 
வேண்டும்  நிலையினை தேடும் 
வேண்டா நிலையினையும் தேடும் 
உண்மையை கண்டறிந்து தேடு 
மண்ணை ஆளுவது நீயாவாய்! 
                                 ம செ கண்ணன்