Monday, 22 August 2011

aaval

                        ஆவல் 
பனித்துளியை சுமக்கும் இலையும் 
இனிமை காணும் சிலகணம் !
மலரும் மொட்டும் கொள்ளும்
சிலகணம் தென்றலின் இனிமையை !
 பேசாவிழிகளும் இன்பம் காணும் 
பூவிழியாளை கண்ட பொழுது !
இசையை உணரும் மனமும் 
இனிமை கொள்ளும் இசைக்க !
_என்றும் இனியவன் 

Wednesday, 6 July 2011

iravu

                   இரவு 
உள்ளம் கசந்த ஏழைக்கு 
கள்ளம் இல்லாத அமைதி 
எங்கும் காணாத அமைதி 
ஏழையின் மனதில் மட்டும் 
மங்கிய வாழ்வின் எதிர்காலத்தை 
மனவானில் காணும் முயற்சி 
இளமை பருவத்தின் இன்னலை
இனிதே கழிக்கும் தோற்றம்










Friday, 29 April 2011

punnagai

உணர்வுகள் கசக்கும் நிலையிலும் 
உண்மையினை ஏற்றுக் கொள் 
வாழும் நாள்களில் இன்னல்கள் 
வந்துகொண்டே இருக்கும் நிலையில் 
உள்ளத்தினை மென்மையாக வைத்துப்பார் 
கள்ளக் குணங்கள் காணாது
தேடும் இதயத்தில் இருக்காது 
தெளிவான எண்ணங்கள் என்பதை 
தெள்ளத் தெளிவாக புரிந்துகொண்டால் 
உள்ளத்தில் காணலாகும் புன்னகை
 நிலையில்லா மனிதரை என்றும்
நினைத்து கொண்டு இராதே
நிம்மதியான வாழ்க்கையினை வாழ
நிறைவான இதயத்துடன் இரு

Friday, 15 April 2011

valum nilai

           வாழும்நிலை 
பூமிதனில் என்னடா பிறந்தோம் 
வாழும் நாட்களில் நல்லவனாய் 
உள்ள மனிதர்களுக்கு நன்மையை 
உள்ளவரையில் செய்யவேண்டும் 
மற்றவர்களுக்காக வாழ்வதே சிறந்தது 
வாழும் பொழுதுகளை நேசிப்போம் 
உண்மையான நிலையைவிட்டு விலகாமல் 
உன்னதமான உறவுகளை நேசிக்கவேண்டும் 
காணும் யாவையும் உண்மையானவையல்ல 
பகட்டுத்தனம் நிறைத்து காணப்படுகிறது 

manam

                                                               துடிக்கும் மனது 
சிவனின் நெற்றிக்கண் தான் -என் 
மனதின் நிலையாக காண்கிறேன் 
வெளியிலிருந்து பார்ப்பவர்க்கு அமைதியாக-என் 
உள்ளே கண்டால் கனலின்போக்கு 
கொடுமைகளின் ஊற்றகத்தான் மனம் 
கடுமையாக போராடிக்கொண்டு இருக்கிறது 
கனலின் தாக்கத்தை கண்டவனுக்கு 
புனலின் குளிர்மையை காண்பதேது
வாட்டங்களின்  குவியலாய் உள்ளது -அதனை
போக்கத்தான் பூமிதனில் உள்ளாரோ 
காணும் வழியெங்கும் முட்பாதையே 
காலம் உணர்த்தும் வசந்தத்தை 
                                       மருத.கண்ணன்  

thunbam

               துன்பநிலை 
பேசாத மனதின் வலியைத்தான்
பேசும் மனங்கள் ரசிக்கின்றன
தேடும் வழியினை காணவில்லை 
தேற்றிகொடுக்காக யாரும் இல்லை 
வாடும் மனங்களை  வதைப்பதே 
வாடிக்கையாக மாறி விட்டன  
வன்மம் மனதில் கொண்டே 
தன்னுடைய காரியத்தை செய்வோர்  
காணும் வழியெங்கும் முட்களின் 
காட்சியாக மாறும் நிச்சயம் 
பூக்களை பறிக்க நினைத்தால்
பூகம்பம் தான் தோன்றுகிறது
தோல்விகளும் வரலாம் ஒருசிலவாக
வாழ்க்கையே தோல்வியென்றால் எப்படி 

Wednesday, 6 April 2011

kavithai kani

              உணர்ந்து கொள் 
தோல்வியை கண்டு துவளாதே 
துடிப்புடன் செயல்பட்டால் தான் 
தூறும் மழையும் கைக்குள்ளே 
துடிக்கும் மின்னலும் உள்ளங்கையிலே 
கண்ணீர் மட்டுமே உனக்கில்லை 
கடவுளும் இருப்பன் உன்னுள்ளே 
உணர்வுகளை உண்மையென  நம்பு
உலகமும் உனக்காக ஏங்கும் 
நம்பிக்கை என்னும் விதையை   
நெஞ்சத்தில் நிதமும் நிறைத்தால் 
வாழ்வில் தோன்றும் இன்னலை 
வழி தெரியாமல் சென்றுவிடும்